Rock Fort Times
Online News

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு…!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10ம் தேதி வெளியானது. தற்போது மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால்,  திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில்  இணையதளத்தில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை  பதிவிறக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.  பின்னர், நிலைமை சீரடைந்தது.  பெரும்பாலும், மேல் நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அந்த பள்ளிகளிலேயே 11 ஆம் வகுப்புகளில் சேர்வதால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.  அதேநேரம் உயர்நிலைப்பள் ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் வேறு மேல்நிலைப்பள்ளிகளில் சேர வேண்டியிருந்ததால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்.  இந்நிலையில்  தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் ஏதேனும் பிழை இருந்தால் அவற்றை உடனடியாக அவரவர் படித்த பள்ளிகள் மூலம் தெரிவித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். ஒரிஜினல் சான்றிதழ் வழங்கும்போது அந்த பிழை திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்