Rock Fort Times
Online News

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- ஒரு வருடம் வெளியே வர முடியாது…!

தமிழக பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து சேலம் மாநகர போலீசின் சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ.கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவதூறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சங்கர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீ்ப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார். குண்டர் சட்ட நடவடிக்கைகான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்தனர். இதன்மூலம், சவுக்கு சங்கர் ஒரு வருடம் ஜாமீனில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்