Rock Fort Times
Online News

அவரை (விஜயை) கரூரில் முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? என்று பேசிய திமுக கவுன்சிலரை தட்டி தூக்கியது காவல்துறை…! 

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதற்கு, ரூ.100  கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர்  அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மகேஷ் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவர் புழல் சிறை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வரை, போலீசாரை சூழ்ந்த தி.மு.க.வினர், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புழல் சிறையில் அடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன், தி.மு.க.,வை சேர்ந்த  வேலூர் மாநகராட்சி கவுன்சிலரும், மகேஷ் ஆதரவாளருமான டீட்டா சரவணன் ஆவேசப்பட்டார்.

‘கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே’ என, மகேஷிடமாக கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில், டீட்டா சரவணன் மீது நான்கு பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தகவல் அறிந்து தலைமறைவான டீட்டா சரவணனை போலீசார்  தேடி வந்தனர். அவரை  இன்று (அக்டோபர் 28) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்