சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கலாம்..?* காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி மாவட்ட சிறையில், ஜெயில் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய கைதிகள் 17 பேரில், மலைக்கரட்டில் பதுங்கிய, 8 கைதிகள், ‘ட்ரோன் தேடுதலில் சிக்கினர். இவர்களுடன் மொத்தம், 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்த நிலையில் சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து சிறைத்துறை டிஜிபி ரத்தோர் அதிரடி உத்தரவிட்டார். கண்காணிப்பு கோபுரத்தில் இனி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அவர்கள் சிறையில் இருந்து தப்ப முயற்சி, போலீசார் மீது தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களின் போது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.