Rock Fort Times
Online News

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்…!

திருச்சி மதுரை ரோடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார், மதுரை ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் பையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜமீர் பாஷா (வயது 20), வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் மொய்தீன் ( 21)என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் அட்டை, அட்டையாக போதை மாத்திரைகள் இருந்தன. இதனை அடுத்து அந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்