Rock Fort Times
Online News

திருச்சியில் ஆணழகன் போட்டி முன் விரோதத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- 4 பேர் கைது…!

திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20). திருச்சி வீரம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (24). இவர்கள் 2 பேரும் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். மேலும் ஆணழகன் போட்டியிலும் பங்கேற்று வந்தனர். இதில், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் வழக்கம்போல சந்தோஷ் குமார் உடற்பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது அலங்கநாதபுரம் பூக்கொல்லை ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் அவரை கீர்த்திவாசன், காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனியைச் சேர்ந்த அலங்கராஜன், வீரமணி,
பிரவீன் (19), சுந்தர் என்கிற சுரேஷ் (19), திருச்சி வடக்கு தாராநல்லூர் முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அப்போது சந்தோஷ் குமாரை கீர்த்தி வாசன் அறிவாளால் வெட்டினார். இதில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீர்த்தி வாசன், பிரவீன், சுந்தர் என்கிற சுரேஷ், மற்றும் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்