கோவிலுக்கு செல்ல மலை உச்சிக்கு ஏறிய போது துயர சம்பவம்: வெயில் கொடுமையால் மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு …!
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த டி.சி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெண்ணிலா(40), மகன்கள் அர்ஷன் (14), பரத் (12). இந்நிலையில், நேற்று நால்வரும் அங்குள்ள மூங்கில் வாழியம்மன் கோவிலுக்கு சென்றனர். மலை மீது இந்தக் கோவில் அமைந்துள்ளதால் அடிவாரத்தில் இருந்து நடந்து சென்றனர்.

அப்போது, அதிக வெயில் காரணமாக அர்ஷன் திடீரென மயங்கி விழுந்தான். இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் மகனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் கொடுமை தாங்க முடியாமல் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.