Rock Fort Times
Online News

திருச்சியில் புகழ்பெற்ற ஸ்ரீ சங்கீதாஸ் ரெஸ்டாரண்ட் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்க கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு…!

திருச்சியில் சைவ உணவகத்திற்கு புகழ்பெற்ற ஸ்ரீ சங்கீதாஸ் ரெஸ்டாரண்ட் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, சென்னை பைபாஸ் ரோடு, தில்லை நகர் என 5 கிளைகளை நடத்தி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டுகளில் நல்ல தரத்துடன், சுவையான சைவ உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்ட ஶ்ரீ சங்கீதாஸ் ரெஸ்டாரண்ட் நிறுவனம், குடும்ப விசேஷங்களுக்காக “சக்ரா ஹால்”, “செந்தூர் ஹால்” என 2 ஏ/சி ஹால்களையும் அமைத்துள்ளது. திருச்சி மட்டுமின்றி பல மாவட்ட மக்களின் நன் மதிப்பை பெற்று சிறந்து விளங்கும் இந்த ரெஸ்டாரண்ட் நிறுவனம், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள கிளைகளில் கோடைகால நீர்மோர் பந்தலை திறந்து சிறப்பான முறையில் தொடங்கி சேவையாற்றி வருகிறது.

இந்த இரு இடங்களிலும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி கலந்த சுவையான மோர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து மோர் அருந்தி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். லாப நோக்கோடு மட்டும் செயல்படாமல் சேவை மனப்பான்மையுடன் கூடிய சமூகக்கறையுடன் செயல்படும் ஸ்ரீ சங்கீதாஸ் ரெஸ்டாரண்ட் நிர்வாகத்தினரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்