திருச்சியில் பொது இடத்தில் மது அருந்தியவர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்- 4 பேர் தப்பி ஓட்டம்…!
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 35). இவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்ஸ்பெக்டர் டிரைவராகவும் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கிரைம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருவானைக்காவல் பொன்னுரங்கபுரம் வாய்க்கால் கரை அருகே ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது. பொது இடத்தில் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும். ஆகவே, அவர்களை பிடிக்க சென்றபோது கிருஷ்ணன், சுப்பிரமணியன், பிரபு, கார்த்திக் ஆகிய 4 பேர் போலீஸ்காரர் சரவணக்குமாரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர் .இதில் காயமடைந்த சரவணகுமார், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.