Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் “தீபம்” ஏற்றும் போராட்டம்…!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வெள்ளிக்கிழமைதோறும் தீபம் ஏற்றும் போராட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில், முருக பக்தர்களுக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அறவழியில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொண்டர்களும், பொதுமக்களும் தங்கள் குடும்பத்துடன் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்