ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியபோது இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் இன்ஸ்பெக்டர் மரணம்…!
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரியா. இவர், கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.
பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது இன்ஸ்பெக்டராக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு பஸ்ஸில் சென்றுள்ளார். பின்னர் பஸ்ஸிலிருந்து இறங்கி தனது கணவரின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த ஸ்பீடு பிரேக்கரில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி பிரியா கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியா உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.