திருச்சி புத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52 ). இவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் பொதுமக்கள் பலரிடம் வசூல் செய்த ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்ததாக தெரிகிறது.
இவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த நபர்களில் ஒருவரான திருச்சி திருவானைக்காவல் மாம்பழச்சாலை பகுதியை சேர்ந்த செல்வராஜ் ( 61) என்பவர் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதற்கு அவருக்கு கண்ணன் கொலை மிரட்டல் விடுத்து ள்ளார். இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் கண்ணன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.