Rock Fort Times
Online News

அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பு பாலத்தை ஏன் இன்னும் திறக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி கேள்வி…

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்- அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மழை, பெருவெள்ளம் காரணமாக முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்தது. அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக பாலத்திறப்பு விழா நடைபெறவில்லை. புதிய பாலத்தை திறந்தால் உங்களுக்கு (ஸ்டாலினுக்கு) ஆபத்து நேரும் என ஜோசியர்கள் எச்சரித்து இருப்பார்கள். அந்த பயம் காரணமாகவே பாலம் திறக்கப்படவில்லை.என்று தெரிவித்தார். அப்போது, விஜயகாந்த் மறைவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். அது அக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதத்தை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும், நடிகராகவும் விளங்கிய விஜயகாந்த் மறைவிற்கு மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அதுகுறித்து விமர்சிக்க கூடாது. இந்த நேரத்தில் அது தேவையற்ற கேள்வி என மலுப்பலாக பதில் அளித்தார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள், தங்கமணி, பரஞ்சோதி, என்.ஆர்.சிவபதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர் மனோகர், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்