Rock Fort Times
Online News

லாரி மீது வேன் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் உள்பட 8 பேர் காயம்…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, கொம்மேடு இருளர் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி மானியம் ஆடூர் பகுதியைச் சேர்ந்த முகமதுயாசின் என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு லாரியின் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

தாப்பாய் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் டிரைவர் முகமது யாசின் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மணிகண்டன், மோகன், அரவிந்த், 10 வயது சிறுவன் லோகேஷ், 15 வயதான கிஷோர், ராஜா, ரங்கநாதன் என 8 பேர் காயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்