திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (வயது 40). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் தனது தாயார் பெயரில் உள்ள
காலி மனையை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி முசிறி மண்டல தாசில்தார் தங்கவேலுவிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட தங்கவேல், பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை தாசில்தார் தங்கவேலிடம் கொடுக்க ஆலோசனை கூறினர். அதன்பேரில், அவர் இன்று (27-12-2023)மாலை லஞ்சப் பணத்தை தங்கவேலுவிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.