பெரம்பலூர் மாவட்டம் அன்பு நகரை சேர்ந்தவர் கனிமொழி (வயது 27). இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் திருச்சி மதுரை ரோடு சினிமா தியேட்டர் அருகில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் கனிமொழி பையில் வைத்திருந்த 1,500 பணத்தை திருடிக் கொண்டு நைசாக இறங்கி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து கனிமொழி தில்லைநகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில்
போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்னை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சக்தி ரோடு பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவரின் மனைவி தேவி (32) என்பதும், அவர்தான் ஓடும் பஸ்ஸில் கனிமொழி இடம் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார், தேவி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.