மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆசிரியர் வருகிற 07.01.2024 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் அந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகிற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.01.2024 அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்வுக்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.