கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சியில் வலையொலி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது
திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய குழுதலைவர்கள் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா திருச்சி -கரூர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. திவ்யா குணசீலன் வரவேற்றார். ஜெயநிர்மலா, சத்யா கோவிந்தராஜ், அமிர்தவல்லி சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். வலையொலி ஒளிப்பதிவை கழகச் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டார். சிறப்பு அழைப்பாளராக மாநகரக் செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டார். முடிவில் கீதா மைக்கேல்ராஜ், செல்வராஜ் ஆகியோர் நன்றி கூறினர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் சேகரன், செந்தில், செங்குட்டுவன், குணசேகரன், மூக்கன், லீலாவேலு, சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.