Rock Fort Times
Online News

சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது… விதிமீறல் புகாரில் அதிரடி நடவடிக்கை

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன் தனியாக கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அரசு அலுவலர்களை பயன்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்