Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு…

திருச்சி மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (12.12.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர்ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ். எஸ்.கோவில்தெரு, சிதம்பரம் மகால் பகுதி, பூசாரித்தெரு, சத்திரம் பஸ் நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, ஓடத்துறை, வடக்கு ஆண்டாள்தெரு, நந்திகோவில்தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரீஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன்ரோடு, சாலைரோடு, வாத்துக்காரத்தெரு,தேவதானம், சங்கரன் பிள்ளைரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம், பனையக்குறிச்சி, முல்லைக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் பராமரிப்பு பணிகளையொட்டி கம்பரசம் பேட்டைதுணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர் காலனி, டி.டி.ரோடு, டாக்கர்ரோடு, பி.வி.எஸ்.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள்நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆள வந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச் செந்துறை மற்றும் கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்.ஏ.பி.பி. குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்