Rock Fort Times
Online News

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் : மேயா் ஆய்வு..

திருச்சி மாநகராட்சி சார்பில் , பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடியிலும் , கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள் , மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் ரூ .106.20 கோடியிலும் என மொத்தம் ரூ .349.98 கோடி செலவில் பஞ்சப்பூரில் பெருந்திட்டப் பணிகளுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் , பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகளை , மேயர் மு. அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மேயர் , அதுகுறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார் . மேலும் , பணிகளை தரமாகவும் , விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார் . ஆய்வின் போது நகரப்பொறியாளர் பி.சிவபாதம் , செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன் , மண்டலத் தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்திருமதி சுபா, உதவி பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்