Rock Fort Times
Online News

திருச்சி புத்தகத் திருவிழா : 35,000 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு…

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறைக்கு என 4 தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பள்ளிக்கல்வித்துறை ( 2 ஆவது ) அரங்கில் பள்ளி மாணவ, மாணவியருக்கான அனைத்து வகையான நலத்திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டு காணொலி காட்சிகளாக  விளக்கப்பட்டு வருகின்றது. இவ்வரங்கில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பார்வையாளர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அரங்கு எண் 21, 22, 23 ஆகியவற்றில் பள்ளி மாணவ மாணவியருக்கு கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கற்றல் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை மிக எளிய முறையில் செலவுகள் ஏதும் இல்லாமல் மாணவ மாணவியர் விரும்பும் வகையில் பாடம் நடத்தும் முறையை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வரங்கில் நாள்தோறும் சிறு சிறு வெற்றியாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று ( 03.12.2023 ) வரை சுமார் 35,000 மாணவ மாணவியரும் 4,500 ஆசிரியர்களும் இக்கண்காட்சியில் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.மேலும் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்களும் மாணவ, மாணவியரால் வாங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணபிரியா மாணவ மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்வின்போது கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்