Rock Fort Times
Online News

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி-2 பெண்கள் மீது வழக்கு….

திருச்சி புத்தூர் ஈ. வி ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 66). இவர் தன்னுடைய மகனுக்கு அரசு வேலை தேடி வந்தார். இதனை அறிந்த திருச்சி பொன் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி ஷீலா மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி லட்சுமி ஆகிய இருவரும் அற்புதராஜை அணுகி,  உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டனர். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்- 2 கோர்ட்டில் அற்புதராஜ் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீது நீதிபதி பிறப்பித்த உத்தரவின்பேரில் ஷீலா, லட்சுமி ஆகிய 2 பெண்கள் மீது கண்டோன்மெண்ட் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்