திருச்சி அரியமங்கலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் பொன்மலை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இறந்த நபருக்கு 48 வயது இருக்கும். டார்க்புளூ சட்டை, கோடு போட்ட லுங்கி அணிந்து உள்ளார். இது குறித்து திருச்சி பொன்மலை ரெயில்வே உதவி ஆய்வாளர் லெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரெயிலில் அடிபட்டு இறந்த நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொன்மலை ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.