திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி…
இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு...
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட உய்யக்கொண்டான் கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உத்தரவின் பேரில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில் அதற்கான முதற்கட்ட பணியானது துவங்கப்பட்டது. அதனை துறை சார்ந்த அதிகாரிகளுடன் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வரகனேரி, எடத்தெரு மற்றும் பாலக்கரை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆகாய தாமரையை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா , மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பகுதி கழக செயலாளர், வட்டக் கழக செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.