Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் பகுதியில் அகற்றப்பட்ட காமராஜர் பிறந்த நாள் நினைவு வளைவை மீண்டும் அமைக்க காங்கிரஸ் கோரிக்கை…

காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராஜரின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் ஸ்ரீரங்கம் நகராட்சி சார்பில் கடந்த 15.7.1965ம் ஆண்டு வளைவு (ஆர்ச்) மற்றும் கல்வெட்டு அமைக்கப்பட்டது. இதனை, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.சி. யுமான டி.எஸ்.அருணாசலம் தலைமையில் முன்னாள் அமைச்சர் வி.ராமையாவால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒய். வெங்கடேச்வர தீட்சிதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பழம் பெருமை வாய்ந்த இந்த ஆர்ச் மற்றும் கல்வெட்டை சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இதனை கண்டித்தும், ஆர்ச்சை மீண்டும் அமைக்க கோரியும் திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமையில், மலைக்கோட்டை கோட்டத் தலைவா் ரவி, ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவா் சிவாஜி சண்முகம், எ.கலைமணி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஐ.என். டி.யூ.சியை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆர்ச் அமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறை கமிஷனரிடம், ஜவகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து பெரிய அளவிலான கல்வெட்டை நான்குக்கும் மேற்பட்டோர் தூக்கி, ரூ. ஒரு லட்சம் செலவில் அங்குள்ள டீக்கடை அருகில் பெரிய சிமெண்ட் திட்டு கட்டி அதில் காமராஜா் பிறந்தநாள் கல்வெட்டு தற்காலிகமாக நிறுவப்பட்டு உள்ளது. அகற்றபட்ட இடத்தில் மீண்டும் ஆா்ச் மற்றும் கல்வெட்டை நிறுவக்கோாி மாவட்ட நிா்வாகம் மற்றும்  நெடுஞ்சாலைத்துறையினாிடம் பல முறை கோாிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மிகவும் எளிமையானவர். கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். காமராஜரின் பொற்கால ஆட்சியில்தான் திருச்சி பி.ஹெச்.இ.எல். உள்பட பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. நீர் நிலைகளை பாதுகாக்க அணைகள் கட்டப்பட்டன. மிகவும் எளிமையாக வாழ்ந்து எளிமையாகவே மறைந்த உன்னத தலைவர். அவரது பிறந்தநாள் நினைவாக அமைக்கப்பட்ட ஆர்ச் மற்றும் கல்வெட்டு இவ்வாறு இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. ஆகவே, அகற்றப்பட்ட ஆர்ச் மற்றும் கல்வெட்டை மீண்டும் ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே லட்சகணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்