Rock Fort Times
Online News

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை விருந்து…* திருச்சி மேற்கு தொகுதி த.வெ.க பிரமுகர் ஆர்.கே.விக்னேஷ் வழங்கினார்..!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான விஜயின் பிறந்தநாள் இன்று(ஜூன் 22) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ – மாணவிகள், பெண்கள் என பல தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, திருச்சி மேற்கு தொகுதி த.வெ.க பிரமுகரும், பொதுப்பணித்துறை காண்ட்ராக்டருமான தொழிலதிபர் ஆர்.கே.விக்னேஷ் ஏற்பாட்டில் திருச்சி புத்தூர் அருகே செயல்பட்டு வரும் அரசு பார்வைத் திறன் குறைபாடு டைய பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் சந்திரா, திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதி செயலாளர் கண்ணன், புத்தூர் பகுதி செயலாளர் விஜய், ஏர்போர்ட் பகுதி செயலாளர் செந்தமிழ், செயற்குழு உறுப்பினர்கள்  டேனியல், மகேஷ், டிஸ்கோ பாபு, பிரபா, வட்ட செயலாளர் திவாகர், ராஜ்மோகன், ஸ்ரீதர், முபாரக், மணி, செல்வம், தேசிங்குராஜா, தொழிலதிபர் சிவக்குமார், உறையூர் பகுதி நிர்வாகிகளான டி. மனோஜ், பி.பிரபாகரன், எஸ்.தேசிங்கு ராஜா, சரவணன், பாட்ஷா, வெங்கடேஷ், வட்ட செயலாளர்கள் பி.திவாகர், ராஜேந்திரன், எஸ்.முபாரக், எஸ்.ராஜ்மோகன், ஸ்ரீதர், மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் வி.நிவேதா, மணி, அருண், செல்வம், முத்து, நந்தினி, அஜ்மல், சதீஷ்குமார், சத்யராஜ், உறையூர் ஐ.டி.விங் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்