கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து இன்று (29.09.2023) 3 விமானங்கள் திருச்சி வந்தடைந்தன. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கோலாலம்பூரில் இருந்து வந்த பயணி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து தங்க நகைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதேபோல துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் உள்ள பட்டன்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. அந்த தங்க பட்டன்களை அதிகாரிகள் தனியாக அகற்றினர். பின்னர் 3 பேரிடமும் பறிமுதல் செய்த தங்கத்தை எடை பார்த்தபோது 401 கிராம் இருந்தது. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.23 லட்சத்து 84 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தொிவித்தாா். தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.