Rock Fort Times
Online News

திருச்சி எடத்தெரு நவநீதகிருஷ்ணன் கோவிலில் உறியடி திருவிழா…

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்..

திருச்சி பாலக்கரை எடத்தெரு நெய்கார யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படும். அதேபோல இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கிருஷ்ணருக்கு அழகிய மணவாளன் மற்றும் வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்பட்டது . 9-ம் தேதி உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில், 25 க்கும்  மேற்பட்ட உறிகளை யாதவ இளைஞர்கள் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சிகளில் எடத்தெரு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர்கள்  மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 918

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்