பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனமான அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இன்று(01-11-2026) புதிதாக 3 கிளைகளை தொடங்கியுள்ளது. அதன்படி திருச்சி நம்பர் 1 டோல்கேட் கிளையை அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனர் டாக்டர் கே.ஆர்.வி. கணேசனும், சத்திரம் பேருந்து நிலையத்தின் புதிய விரிவுபடுத்தப்பட்ட ஷோரூமை அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிர்வாக பங்குதாரர்கள் ஜி.செல்வராணி கணேசன், நிஷா, சிபி ஆகியோரும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையின் புதிய கிளையை அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் ஜி.அஸ்வின் ஆகியோரும் திறந்து வைத்தனர். இதுகுறித்து நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி. கணேசன் பேசும்போது., பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அளித்துவரும் அமோக ஆதரவிற்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 45 கிளைகளை கொண்ட அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்ஸில் இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூரில் புதிதாக 3 கிளைகளை ஆரம்பித்துள்ளோம்.
எங்களது நிறுவனத்தில் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ், வெஜ் ரெஸ்டாரண்ட், செக்கு எண்ணெய்கள் ஆகியவற்றை மனநிறைவோடு வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வது உள்ளபடியே மனதிற்கு நிறைவாக உள்ளது. தற்போது வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு எங்களின் ஸ்பெஷல் தயாரிப்புகளான கை முறுக்கு, சீடை, தட்டை ஆகியவற்றுடன் பல்வேறு வகையான இனிப்பு கார வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். இத்திறப்பு விழா நிகழ்வில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், ரெட்டியார் நலச்சங்க நிர்வாகிகள்,
வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் பி.ஆர்.ஓ பார்த்திபன், சூரி, உள்ளிட்ட நிர்வாகிகளும் ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.