Rock Fort Times
Online News

தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறித்துச் சென்ற 2 பேருக்கு வலைவீச்சு…

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகபூஷணம் ( வயது 46).
இவர் வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது,
இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அவரிடம் சென்று எங்களது மாட்டை காணவில்லை, இந்தப் பக்கம் வந்ததா? எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் நாகபுஷணம் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர். ஆனால், அவர்கள் பறித்துச் சென்றது கவரிங் நகை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாகபூஷணம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்