Rock Fort Times
Online News

 3 நாய்க்குட்டிகளை அடித்துக் கொன்ற தூய்மை பணியாளர் கைது…

திருச்சி முனிசிபல் காலனி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா . இவர் தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். அதில், ஒரு நாய் 3 குட்டிகளை ஈன்றது. அந்த நாய் குட்டிகள் அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் வீரா என்கிற வீரையன் (வயது 22 )என்பவர் குடிபோதையில் மரக்கட்டையால் 3 நாய்க்குட்டிகளை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டை போலீசில் லதா புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து வீரையனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார். அவர் மீது கோட்டை, பாலக்கரை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்