திருச்சி திருவெறும்பூர் அருகே மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர்பாபு (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காருக்கு பின்னால் தனது தாயுடன் வந்த வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டாக்டருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, டாக்டரை அந்த வாலிபரும், அவரது தாயும் சேர்ந்து தாக்கி கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த டாக்டர் ஜவகர்பாபு திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வாலிபரையும், அவரது தாயையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.