திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பாணி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் நகை, பணத்திற்காக 2012-ம் ஆண்டு முதல் அவரது தந்தை தேக்கன் (75), தங்கதுரை (35), பெரியசாமி(75), குமரேசன் (50), சத்தியநாதன் (45), விஜய்விக்டர் (27), அற்புதசாமி (70), கோகிலா (70) ஆகிய 8 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்குகள் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் 2 வழக்குகளில் அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாபு தீர்ப்பளித்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் , 2 வழக்குகளில், ஒரு வழக்கில் இரண்டு ஆயுள் சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து இன்று ( 17.08.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. 

Comments are closed, but trackbacks and pingbacks are open.