Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வு அறிவிப்பு…!

திருச்சியில் 1,100 பேர் எழுதுகிறார்கள்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி, சிவில் நீதிபதி பதவிக்களுக்கான தேர்வு வரும் 19.08.2023 நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1,100 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இதற்காக 4 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 2 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இருப்பர். தேர்வு மையங்களை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 9 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்