Rock Fort Times
Online News

கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணியிடை நீக்கம்…!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் விற்பனையாளராக திருச்செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு மதுபிரியர் ஒருவர் வந்து 2 பீர் வாங்கி உள்ளார். அப்போது திருச்செல்வம், 2 பாட்டில்களுக்கும் தலா ரூ.20 கூடுதலாக வாங்கியுள்ளார். இதனை வீடியோவில் பதிவு செய்த மது பிரியர் திருச்சி டாஸ்மாக் அதிகாரிகளிடம் புகார் செய்தார். புகாரின்பேரில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த திருச்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்