Rock Fort Times
Online News

உடல் நலக்குறைவு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி….

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ( 12.08.2023 ) சேலத்தில் அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார் . தர்மபுரி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக , அவர் தர்மபுரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு  அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். நெஞ்சுவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்ட நிலையில், இதனை அவருடன் வந்தவர்கள் மறுத்தனர். அமைச்சருக்கு உடல் சோர்வு தான் வேறு ஒன்றும் இல்லை என்றனர். அமைச்சருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்