சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினார்கள்.
இதில், சேலம் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாவட்ட கலெக்டர், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.