Rock Fort Times
Online News

அஞ்சல்துறை சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி…

நாட்டின் சுதந்திர தினத்தை அனைவரும் எழுச்சியுடன் கொண்டாட, வீடுகள், அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றிட மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். அதன்படி வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும், அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படும் தேசியக் கொடியை மக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி , இந்திய அஞ்சல் துறை சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று ( 08.0.2023 )  தேசியக் கொடியுடன் விழிப்புணர்வு , பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு கையில் தேசிய கொடியினை ஏந்தியபடி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முதல் அம்மாமண்டபம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்