Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் டாஸ்மார்க் மதுபாட்டில்களை பதுக்கி விற்க முயன்ற 78 பேர் கைது.

திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்தியப்பிரியா ஐபிஎஸ் ஸ்ரீரங்கம், மேலூர் வடக்குதெரு, கிழக்குதெரு, கொள்ளிடக்கரை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நேரடியாக மதுவிலக்கு சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது மேலூர் வடக்குதெருவில் வசித்து வரும் மருதமுத்துவின் மகன் பிரபு வீட்டில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த பகுதியில் ஏற்கனவே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்று வந்த தங்கபொண்ணு என்கிற மூதாட்டிக்கு கள்ளசந்தையில் மதுபானம் விற்கக்கூடாது என்றும், வாழ்வாதாரத்துக்கு வேண்டிய உதவிகள் செய்வதாகவும் கமிஷனர் அறிவுரை கூறினார். மேலும், கடந்த 4 நாட்களாக திருச்சி மாநகரத்தில் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தினர். இதில் கள்ளசந்தையில் அரசு மதுபானங்களை விற்பனை செய்ததாகவும், விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாகவும், 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 605 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இதுபோன்ற கள்ளச்சாராயம், போலி மதுபானம் மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர கமிஷனர் எம்.சத்தியபிரியா ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்