திருச்சி மாவட்டம் முசிறியில் சிலர் கஞ்சா விற்பதாகவும், இதனால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி டிஎஸ்பி யாஸ்மினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாயி அம்மன் கோவில் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்ற 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முசிறி கடைவீதி, கூடை மறக்கார தெருவை சேர்ந்த நித்தீஸ்வரன் (22), முசிறி அருகே கீழப்பள்ளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25), முசிறி அரசு மருத்துவமனை பின்புறம் பெரியார் நகரை சேர்ந்த மோகன் (25), மலையப்பபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (19), கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் (21) என்பதும் அப்பகுதியில் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை இட்ட போது அதில் 750 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

Comments are closed.