Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஓட்டலில் போலீசார் கஞ்சா “ரெய்டு”- 2 பேர் சிக்கினர்- 4பேர் தப்பி ஓட்டம்…!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கஞ்சா விற்பனை மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பஞ்சக்கரை ரோடு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குச் சென்று ரெய்டு நடத்தினர். அப்போது அந்த ஓட்டலில் உள்ள முதல் மாடியில் ஒரு அறையில் கஞ்சா பொட்டலங்களுடன் 2 பேர் சிக்கினர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கவிராஜா, கேரள மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள், திண்டுக்கல் கோம்பை பகுதியைச் சேர்ந்த யாஸ் நாராயணா, சியாம் சுந்தர், சரத், ஸ்ரீவத் என்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல, கருமண்டபம் பகுதியில் கஞ்சா விற்றதாக சந்தோஷ் என்பவரை மாநகர மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் திருச்சி எடமலைப்பட்டிபுதூர், பொன்னகர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஏசுராஜ், கணபதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்