திருச்சிராப்பள்ளி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயில் ரோடு சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உறையூர் காவல்துறையினர் அதிரடியாக இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை சனிக்கிழமை காலையில் கைது செய்தனர். இக்கொலையில் குற்றவாளிகளான மிளகு பாறை பகுதியை சேர்ந்த கோபால் வயது 30 , தாராநல்லூரை சேர்ந்த ஹரி வயது 25 , பாலக்கரை கல்லுக்கார தெருவை சேர்ந்த விஜி வயது 25, உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த நவீன் குமார் வயது 28, தஞ்சாவூர் பூதலூரை சேர்ந்த அபிஷேக் வயது 23 ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். காவல்துறையின் விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக முன் விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.