திருச்சியில் ரூ.5.14 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று(5-1-2024) தொடங்கி வைத்தார். திருச்சி பாலக்கரை மற்றும் குதுபாப்பள்ளத்தில் ரூ. 5.14 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையங்களையும் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல உதவி கமிஷனர் சண்முகம், மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர் கலைச்செல்வி ஜெகநாதன், கமால் முஸ்தபா, ராமதாஸ்,விஜயா ஜெயராஜ், புஷ்பராஜ், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி ,வட்டச் செயலாளர்கள் தனசேகரன், மார்சிங் பேட்டை செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.திருச்சி மாநகராட்சி 53-வது வார்டு குதுபாபள்ளத்தில் ரூ 2.57 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையத்தில் கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு அறை, புத்தக அலமாரிகள், கழிவறைகள், வாகனம் நிறுத்தும் இடம், படிப்பக இருக்கைகள், தகவல் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ரூ.2.57 கோடியில் நவீன வசதிகளுடன் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம் பாலக்கரை 50 -வது வார்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. காற்றோட்ட வசதி மற்றும் கட்டிடத்திற்குள் சூரிய வெளிச்சம் அதிகமாக புகாதவகையில் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது. இம்மையங்கள் மூலம் ஏழை ,எளிய பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி செல்லும் இளைஞர்கள், மகளிர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பயனடைவார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.