Rock Fort Times
Online News

ராஜஸ்தானில் இருந்து மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

திருச்சி கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது 62 மூட்டைகளில் 452.5 கிலோ அளவுள்ள புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.3 லட்சம் மதிப்புடைய அந்த புகையிலை பொருட்கள் ராஜஸ்தானிலிருந்து காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், ராஜஸ்தானை சேர்ந்த சுனில்குமார்(23) என்பவரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்