நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில்
24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அதேபோல திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி தில்லைநகர் பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் இருந்த பைகளில் கட்டுக்கட்டாக ரூ.42 லட்சம் இருந்தது. ஆனால், அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் வேனுடன் பணத்தை பறிமுதல் செய்து மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆர்.டி.ஓ. அருள், மேற்கு தாசில்தார் விக்னேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பணம் திருச்சியில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களின் அன்றாட வசூலான தொகை என்பதும், அந்த தொகையை தனியார் ஏஜென்சி மூலம் வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
1
of 938
Comments are closed, but trackbacks and pingbacks are open.