Rock Fort Times
Online News

திருச்சியில் பா.ம.க. முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்…

மற்றொரு வாலிபருக்கு வலை வீச்சு..

திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே பிரபு ஆம்புலன்ஸ் என்ற பெயரில் ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் ( வயது45). இவரது வீடு திருச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே புத்தூர் ஆஃபீஸர்ஸ் காலனியில் உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் திருச்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் கட்சிப் பொறுப்பில் இல்லை.

இந்நிலையில், பிரபாகரன் நேற்று ( 11.12.2023 )  இரவு திருச்சி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது இரவு 9.30 மணியளவில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரது அலுவலகத்தில் புகுந்து பிரபுவை சரமாரியாக தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி காவல் துணை ஆணையர் அன்பு மற்றும் அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் அம்பிகா புரத்தை சேர்ந்த லட்சுமணன் ( 38), அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த ரியாஸ் ராஜேஷ் ( 24), தஞ்சை கச்சமங்கலம் மகாதேவபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28), அரியமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பஷீர் ( 29) ஆகிய 4பேர்  திருவெறும்பூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களை திருச்சிக்கு கொண்டு வந்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்