திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் லால்குடி போலீஸ் உட்கோட்டத்திற்கு உள்ள லால்குடி, கொள்ளிடம் நம்பர்-1 டோல்கேட், சமயபுரம், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களில் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பார்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? முறையாக அனுமதி பெற்று பார்கள் இயங்குகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி துணை சூப்பிரண்டு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கொள்ளிடம் நம்பர்-1 டோல்கேட், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம், சிறுகனூர் அருகே உள்ள தச்சங்குறிச்சி ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்படாமல், அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 டாஸ்மாக் பார்களுக்கு, டாஸ்மாக் மேலாளர் மற்றும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.