திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் நல்லேந்திரன். இவரது மகன் மாரிமுத்து. கொத்தனார். இவர், சம்பவத்தன்று திருவானைக்காவல் ஒய் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்தனர். மாரிமுத்து தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று வாலிபர்களும் பீர் பாட்டிலால் மாரிமுத்துவின் மண்டையை உடைத்து கத்தி முனையில் அவரிடம் இருந்த ரூ.5500, செல்போன் ஆகியவற்றை பிடுங்கி கொண்டு விரட்டி விட்டனர். மண்டை உடைந்து ரத்தம் பீறிட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிந்து அந்த 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த குருமூர்த்தி (23), சக்திவேல் (19), பரணிகுமார் ( 21) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் குருமூர்த்தி மீது ஸ்ரீரங்கம், கோட்டை, பொன்மலை காவல் நிலையங்களில் 6 வழக்குகளும், சக்திவேல் மீது ஸ்ரீரங்கத்தில் ஒரு வழக்கும், பரணி குமார் மீது ஸ்ரீரங்கம், லால்குடியில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரவுடிகளாகவும் வலம் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.