Rock Fort Times
Online News

இருசக்கர வாகனத்தில் படுத்தபடியே ஓட்டிச் சென்று ‘அட்ரா சிட்டி’ காட்டிய வாலிபர் மீது வழக்கு பாய்ந்தது…!

இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுவது இளைஞர்களின் ட்ரெண்டிங்காக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு சுவரில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று சாகசம் செய்த வாலிபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்- துறையூர் சாலையில் வாலிபர் ஒருவர் தனது ஆல்ட்டர் செய்யப்பட்ட டிவிஎஸ்- 50 வாகனத்தில் படுத்தவாறு ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்டதுடன் அதை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த சம்பவம் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ காட்சியை கண்ட பலரும் இதுபோன்ற சாகச காட்சிகளை காவல்துறையினர் அனுமதிக்க கூடாது, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து புலிவலம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் சாகசத்தில் ஈடுபட்டது புலிவலத்தைச் சேர்ந்த நிவேஷ்(19) என தெரியவந்தது. இதனையடுத்து நிவேஷ் மீது புலிவலம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்